ஜோதிகாவுக்கு விஜய்யை பிடிக்காதா?

jyothika does not like vijay

by Mari S, Nov 5, 2018, 12:25 PM IST

காற்றின் மொழி படத்தின் பிரஸ் மீட் நேற்று முன் தினம் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தனக்கு செளகரியமாக உள்ள நடிகர்கள் பட்டியலை கூறினார்.

அவர் தனக்கு அஜித்,சூரியா,மாதவன் ஆகிய ஹீரோக்களுடன் நடிப்பது தனக்கு விருப்பம் என்றும் கூறினார். ஜோதிகாவின் இந்த ஸ்டேட்மெண்ட் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக மாறியது.

ஏனெனில், ஜோதிகா ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார். ஆனால், அவர்களின் பெயர்களை ஜோதிகா ஏன் கூறவில்லை என்றும், அவர்கள் அவருக்கு என்ன அசெளகரியம் தந்தார்கள் எனவும் கேள்வி எழும்பியுள்ளது.

இதிலும், தல ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் போரே வெடித்துள்ளது. சர்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், விஜய்யுடன் ஜோதிகா குஷி, திருமலை எனும் இரு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த போதும், அவரது பெயரை ஏன் கூறவில்லை என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜோதிகா, பேச்சு அவசரத்தில் சிலரை குறிப்பிட்டிருக்கலாம். அந்த நேரத்தில் சிலரது பெயர்கள் மறந்திருக்கலாம். திட்டமிட்டு அவர் எந்த நடிகரையும் அவமதிக்கவில்லை என்ற சமாளிப்பு பேச்சும் ஜோதிகா மற்றும் சூர்யா ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இதற்கு ஜோதிகா விரைவில் ஒரு அறிக்கை வெளியிட்டால் தான் இந்த பிரச்சனை முடியும் என தெரிகிறது.

 

You'r reading ஜோதிகாவுக்கு விஜய்யை பிடிக்காதா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை