விளாங்குறிச்சி மாநகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா: சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

vilankurichi-corporation-school-centenary-celebration

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சி பள்ளி 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா நேற்று (பிப் 28) சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கோவை மாநராட்சியின் கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்றார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நூற்றாண்டு சுடர் ஏற்றினார்.கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை மாநராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், ஆணையர் சிவகுரு பிரபாகரன் , பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ, கோவை துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, ஜெயராம் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, பள்ளிக்கு தேவையான ஏராளமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.