கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற காரமடை தேர் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தேருக்கு முன்னரும் பின்னரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தேருக்கு பின்னாலே குப்பைகளை அகற்றிக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் வந்தனர்.
இந்த செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. தேர் ஓடிக் கொண்டிருக்கும் போதே, வீதிகள் தூய்மையாகி விட்டன. முன்பெல்லாம் தேரோட்டத்தின் போது குப்பைகள் நிறைந்து காணப்படும்.இப்போது தேருக்கு பின்னாலேயே தூய்மை பணியாளர்கள் குழுவாக சென்று பக்தர்கள் போடும் பழங்கள் மற்றும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றியதால் தேர் ஓடிய தெரு போலவே தெரியவில்லை.
சபாஷ் காரமடை பஞ்சாயத்து!







