லயன்ஸ் கிளப் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி சாம்பியன்

Coimbatore-team-crowned-champions-in-Lions-Club-cricket-tournament

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242சி மாவட்டத்தின்ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

''பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் கூட்டு மாவட்டம் சார்பில் சேலம் எஸ்.ஆர்.பி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லயன்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கோவை, சேலம், ஈரோடு, கரூர், சிவகாசி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, மற்றும் தர்மபுரி மாவட்ட லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. கூட்டு மாவட்ட தலைவர் அய்யாதுரை, கூட்டு மாவட்ட பொருளாளர் நித்யானந்தம் ஆகியோர் போட்டியைத் துவக்கி வைத்தனர்.

இறுதிப் போட்டியில் 3242E மாவட்டத்தின் ஈரோடு லயன்ஸ் கிரிக்கெட் அணியுடன் மோதி கோவை மாவட்டம் 3242சி லயன்ஸ் கிரிக்கெட் அணி PMJF கனகராஜ் மற்றும் வனம் பிரபு தலைமையில் வெற்றி பெற்றது.''

வெற்றி பெற்ற கோவை அணிக்கு மாவட்ட ஆளுநர் PMJF A. ராஜசேகர், முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF S. ராம்குமார், MJF முத்துவேல், MJF வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் வெற்றிக் கோப்பையை கூட்டு மாவட்ட செயலாளர் சவரிராஜன், 3242 E மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது