கோவையில் அன்பழகன் நினைவு தினம் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

Anbazhagan-s-memorial-day-in-Coimbatore-DMK-members-pay-tribute

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று வடகோவை கிராஸ்கட் சாலையிலுள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில், அவரின் உருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில தீர்மானக் குழு செயலாளர் கார்த்திக், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் கல்பனா செந்தில், பொது குழு உறுப்பினர்கள் சரஸ்வதிப புஷ்பராஜ், நோயல் செல்வம், ச.குப்புசாமி, வடவள்ளி தங்கம், பகுதி கழக செயலாளர்கள் டெம்போ சிவா, ஆர்.எம்.சேதுராமன், வ.ம.சண்முகசுந்தரம், இலா.தேவசீலன், ஆ.கண்ணன், ஏ.எஸ். நடராஜ் மற்றும் மாவட்டக் கழக, பகுதி கழக,வட்டக் கழக, அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பாக முகவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :