கோவை பேருந்து நிலையத்தில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் அட்டகாசம் - பொதுமக்கள் முகம் சுளிப்பு

Insta-influencer-s-outburst-at-Coimbatore-bus-stand

கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் அவரது நண்பர்கள் சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் வந்துள்ளனர். பின்னர், பொதுமக்கள் முன்னிலையில் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோவாக பதிவு செய்து அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அனுமதியின்றி சட்டத்திற்கு எதிராகவும் பல பெண்களை வீடியோ எடுத்து ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இதை பார்க்கும் மற்ற இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் இதே போல் செய்ய தொடங்குவார்கள். பொதுமக்கள் கூடும் இடத்தில், கோவை காவல்துறையினர் இது போன்ற செயலை எப்படி அனுமதிக்கிறார்கள்?, ஏதாவது விபரீதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? அந்த வீடியோவை நீக்கி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை கோவை போலீசார் எடுப்பார்களா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

READ MORE ABOUT :