5 மாதத்தில் தீர்ப்பு : கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை

verdict-in-5-months-life-imprisonment-for-coimbatore-sex-offenders

கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நள்ளிரவில் கோவை பீளமேடு விமானநிலையம் பின்புறம் பகுதி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் இருந்தபோது, குற்றவாளிகள் முதலில் நண்பரை தாக்கினர். பின்னர், மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் கருப்பசாமி,காளீஸ்வரன், தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கும்பல் பலாத்காரம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீது டிசம்பர் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் வெய்யப்பட்டது. விசாரணை பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியது.மொத்தம் 72 சாட்சிகள், 111 ஆதாரங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதங்கள் முடிந்தது. நேற்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை சுமார் 5 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது. இது வேகமான நீதிமன்ற நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

READ MORE ABOUT :