கோவை மத்திய சிறைச்சாலையில் சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, கோவை பெண்கள் தனிச்சிறை மற்றும் மத்திய சிறை பணியாளர்களின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழாவை சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் கனலி (எ) சுப்பு செந்தில்குமார் எழுதிய "பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா?, அவள் அவன் மேக்கப், இளமை திரும்புதே' ஆகிய மூன்று நூல்களை சிறை நுலகத்துக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உளவியல் நிபுணர் ஜெயா மகேஷ், மருத்துவர் பிரபா கோவை மத்திய சிறை துணை சிறை அலுவலர் கலாநிதி, கோவை மத்திய சிறை ஆசிரியர் சக்திவேல் மற்றும் ஏராளமான பெண்கள் சிறைக் காவலர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







