சாதி பெயரில் இயங்கும் திருமண மையங்களுக்கு தடை - பெரியார் திராவிட கழகம் தீர்மானம்

bans-marriage-centres-operating-in-the-name-of-caste-Periyar-Dravida-Kazhagam-resolution

தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திரபுரம் பெரியார் படிப்பகத்தில் பொதுசெயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் இதில், பங்கேற்றனர். கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் சாதி மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. கோவையில் பெரியார் அறிவுலகம் அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சாதி பெயரில் இயங்கும் திருமண தகவல் மையங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

READ MORE ABOUT :