திண்டுக்கல் சீனிவாசன் படத்துக்கு பாவாடை கட்டியது யார்? பொள்ளாச்சியில் பரபரப்பு

skirt-for-dindigul-srinivasan-s-portrait-in-pollachi

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல் சீனிவாசன் உருவப்படத்துக்கு பாவடை அணிவித்து தொங்கவிட்டது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17ஆம் தேதி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறி தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினர். இது தமிழகம் முழுவதும் மக்களை கொதிப்படைய செய்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று பொள்ளாச்சியில் பேருந்து நிலையம், உடுமலை சாலையில் உள்ள சிக்னல்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், அம்மன் அர்ச்சுணன், விஜயபாஸ்கர் ஆகியோர் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் படத்துக்கு பாவாடை அணிவிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் உருவ பொம்மைகளை அகற்றினர். இந்த உருவ பொம்மைகளை தொங்கவிட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE ABOUT :