ரம்ஜான் பெருநாள் உரையாற்றிய, இமாம் திடீரென்று சரிந்து விழுந்து மரணம்!

Imam-suddenly-collapses-and-dies-while-delivering-a-speech-on-the-occasion-of-Ramadan

ரம்ஜான் பெருநாள் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது இமாம் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம், திருக்கட்டிரி அருகே உள்ள அட்டச்சேரியில் ஜும்ஆ மஸ்ஜித் உள்ளது. இங்கு, இமாம் மவுலவி அப்துல் ஷுகூர் காசிமி (54) என்பவர் ரமலான் பெருநாள் தொழுகையை நிறைவேறிவிட்டு. சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.சமூக ஒற்றுமையின் அவசியம் மற்றும் சகோதர பாசம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு. சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.

மசூதியில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தபோதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறந்த பேச்சாளரும், தேர்ச்சி பெற்ற அறிஞருமான மௌலவி அப்துல் ஷுகூர் காசிமி, தொடுபுழாவைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவரது, உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :