பத்திர எழுத்தர் தொழில் முனைவோருக்கான நான்கு நாள் உண்டு, உறைவிட பயிற்சி கோவை எட்டிமடையில் உள்ள வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
ப்ராப்தம் அகாடமி இயக்குனர் ரவீந்திரன், உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் கோகுல் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'என் நிலம்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார் மற்றும் நிலம் உங்கள் எதிர்காலம் நூல் ஆசிரியர் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் , பத்திர எழுத்தர்கள் , தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சரவணன் மாரியப்பன், மோகன், சபரி, அருள்ஜோதி சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.







