கோவையை சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பு அம்சங்களை விளக்குவதும் முதலில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று, இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கற்பதில் அவர் காட்டிய ஆர்வத்துக்காகவும் குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தில் ஜீவா சமீபத்தில் கௌரவிக்கப்பட்டார்.
சாம்சங் நிறுவனத்தின் இந்த திட்டம் இளைஞர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களையும், நடைமுறை வேலை அனுபவத்தையும் வழங்கி, ரீடைல் விற்பனைத் தறையில் வேலைவாய்ப்புக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. இந்தியா முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்களை மேம்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜீவா கூறுகையில், "ஆரம்பத்தில், என்னால் வாடிக்கையாளர்களிடம் சரியாகப் பேசவோ, பொருட்களைப் பற்றி விளக்கவோ முடியவில்லை. அதனால் , வாடிக்கையாளர்கள் வேறு இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். என் மேலாளர் என்னைத் திட்டுவார். தோஸ்த் பயிற்சிக்குப் பிறகு, நான் பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துக்கூறி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இப்போது, என் மேலாளர் என்னை முழுமையாக நம்புகிறார். நான் ஒரு வாடிக்கையாளளிடத்தில் பேசினால், கண்டிப்பாக அந்த விற்பனையை முடித்துவிடுவேன் '' என்கிறார்.
தமிழ்நாட்டில் சாம்சங் தோஸ்த் மூலம் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற 865 இளைஞர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 30 சிறந்த பயிற்சியாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், ஜீவாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.







