தீராத விளையாட்டுக்கு லாவா இசட்92 போன்!

மொபைல் போன் கேம் பிரியர்களுக்காக லாவா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய இசட்92 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
 
"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, உயர் செயல்திறம், நீடித்த உழைப்பு மற்றும் பெரிய திரை, சிறப்பான தோற்றம் கொண்டதாக 2019ம் ஆண்டில் எங்கள் முதல் தயாரிப்பான Z92 போனை சந்தைப்படுத்துவதில் மகிழ்ச்சி," என்று லாவா நிறுவன தயாரிப்பு துறை தலைவர் ஜஸ்நீட் சிங் கூறியுள்ளார்.
லாவா Z92 போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.22 அங்குலம் ஹெச்.டி வகை
இயக்கவேகம்: 3 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி (256 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளும் வசதி)
முன்பக்க காமிரா: 8 எம்பி ஆற்றலுடன் தற்படத்துக்காக (selfie)
பின்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்டது
மின்கலம்: 3260 mAh
பிராசஸர்: 2.0 GHz ஆக்டோ கோர் மீடியாடெக்; ஹீலியோ பி22
ஜியோ பயனர்களுக்கு விசேஷித்த கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகைகள் உண்டு. Z92 போனில் ஆறு வகைகளில் (mode) படம் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. தொடுதிரையை காப்பதற்காக GG3 திரைபாதுகாப்புடன் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.9,999/-
 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email