வாட்ஸ்அப்பில் வந்து விட்டது ஃபேஸ் ஐடி!

வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
 
தற்போது ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பயனர்கள் தங்கள் முகப்பதிவு அல்லது தொடுதல் ஆகியவற்றை வாட்ஸ்அப்பை திறக்கும் கடவுச்சொல்லாக வைத்துக் கொள்ள இயலும். ஆப்பிள் ஐபோன், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகியவை முகப்பதிவு வசதியை கொண்டுள்ளன. ஏனைய ஐபோன்களில் தொடுதல் முறையில் வாட்ஸ்அப் கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ள இயலும்.
 
இந்தப் புதிய வசதியை Settings > Account > Privacy and enable Screen Lock என்ற தடத்தின் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். ஸ்கிரீன் லாக் என்பதை நீங்கள் தெரிவு செய்யும்போது, அது முகம் அல்லது தொடுதல் ஆகியவற்றுள் எதனை கடவுச்சொல்லாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டு உங்கள் தெரிவை ஏற்றுக்கொள்ளும்.
 
வாட்ஸ்அப் செயலியை திறந்து பயன்படுத்துவதற்கு உடனடியாக (immediately), ஒரு நிமிடம் கழித்து (after one minute), 15 நிமிடங்கள் கழித்து (after 15 minutes) மற்றும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு (after one hour) என்ற வகைப்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு நீங்கள் இரண்டாம் வகையை தெரிவு செய்தால், ஒரு நிமிட நேரம் தொடுதலை அல்லது முகப்பதிவை நீட்டித்தால் மட்டுமே செயலி திறக்கும்.
 
ஒருவேளை உங்கள் தொடுதல் அல்லது முகப்பதிவை செயலியால் உணர்ந்து கொள்ள முடியாத நிலை நேரும் பட்சத்தில், கடவுகுறியீட்டை (passcode) உள்ளிடும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். சரியான கடவுகுறியீட்டை உள்ளீடு செய்து செயலியை திறந்து கொள்ள இயலும்.
 
எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Oppo-K3-With-Ultra-Clear-Night-View-will-be-available-from-July-23
கேம் பூஸ்ட்டுடன் கூடிய ஆப்போ கே3 ஸ்மார்ட்போன் விற்பனை
Samsung-launched-Galaxy-A80-with-triple-rotating-camera
ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ80
5-GB-free-of-cost-data-for-BSNL-customers
பிஎஸ்என்எல் லேண்ட்லைன்: தினமும் 5 ஜிபி டேட்டா இலவசம்!
Realme-X-and-Realme-3i-Chinese-smartphones-launched-in-India
ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
Redmi-smartphones-get-price-cut-in-India
ஜூலை 18 வரை நோட் 7எஸ் உள்பட ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி
Electronic-Vehicles-Charging-Stations-to-use-three-technologies
மின் வாகனங்களை சார்ஜ் செய்ய மூன்று தொழில்நுட்பங்கள்
Instagram-introduces-anti-bullying-tools
துன்புறுத்தும் செய்திகளை தடுக்கும் இன்ஸ்டாகிராம்
TikToks-key-community-guidelines-that-every-user-should-know
டிக்டாக் கணக்கு முடக்கப்படாமல் பயன்படுத்துவது எப்படி?
Nokia-6point1-smartphone-at-low-price
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு
Samsung-devices-get-replaced-faster-OnePlus-used-for-longer
விரைவாக மாற்றப்படும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?
Tag Clouds