சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெசிபி

வீட்டிலேயே உருளைக்கிழங்கை வைத்து சூப்பர் டிஷ் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய உளைக்கிழங்கு - 2

இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

சோள மா வு - 3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

வெங்காயத்தாள் - சிறிதளவு

பூண்டு - 6 பல்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் - அரை டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், உருளைக்கிழங்கின் தோலை சீவி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதனை ஒரு பாத்திரித்தில் போட்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு பக்கம் வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு, உருளைக்கிழங்கில் சோள மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து பிசைந்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கியதும் பொரித்து வைத்த உருளைக்கிழங்குடன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வேகவைத்து எடுக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி..!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email