ஆரோக்கியம் சிறக்க உதவும் சீரக நீர்!

'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது. 
 
ஒரு கரண்டி சீரகத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இதை பருக வேண்டும். 
 
சீரக நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
செரிமானத்திற்கு உதவுகிறது
 
காலையில் சீரக நீரை பருகினால், கார்போஹைடிரேட் மற்றும் குளூக்கோஸ் போன்ற சர்க்கரை பொருள்கள், கொழுப்பு இவற்றை சிதைக்கக்கூடிய நொதிகளின் (என்சைம்) உற்பத்தி தூண்டப்பெறும். உடலில் நடைபெறும் மெட்டாபாலிசம் என்ற வளர்சிதை மாற்றத்தை சீரக நீர் ஊக்குவிக்கும். ஆகவே, செரிமான கோளாறுகளின் அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயு தொல்லை ஆகியவை இருக்காது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது
 
நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக வேலை செய்வதற்கு இரும்பு சத்து அவசியம். சீரகத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. தினசரி நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்தில் 7 விழுக்காடு ஒரு குவளை (தம்ளர்) சீரக நீர் மூலம் கிடைக்கிறது. நோய் தொற்றிலிருந்து (இன்பெக்ஷன்) உடலை பாதுகாப்பதற்கு உதவக்கூடிய வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' சீரக நீரில் காணப்படுகிறது.
இரத்தசோகைக்கான சிகிச்சை
 
உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இல்லையெனில் தேவையான எண்ணிக்கையில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகாது. அந்த நிலையில் உடல் முழுவதும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) நிறைந்த இரத்தம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். சீரக நீரில் காணப்படும் அதிகப்படியான இரும்பு சத்து இக்குறைபாட்டை நீக்குகிறது.
 
சுவாச மண்டலத்திற்குப் பாதுகாப்பு
 
நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அகற்றுவதற்கு சீரக நீர் உதவுகிறது. சளி மற்றும் இருமலை உருவாக்கும் கிருமிகளை சீரக நீரிலுள்ள சத்துகள் அழிக்கின்றன.
நினைவுத்திறனை அதிகரிக்கிறது
 
மூளையின் திறனை மேம்படுத்தும் இயல்பு சீரகத்திற்கு உள்ளது. வேலையில் கவனம் செலுத்தவும், ஞாபக சக்தியை கூர்மைப்படுத்தவும் சீரகம் உதவுகிறது.
தூக்கமின்மையை போக்குகிறது
 
தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு சீரக நீர் அருமருந்து. சீரக நீரை தொடர்ந்து அருந்தி
வந்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.
 
சரும சுத்திகரிப்பு
 
சீரகத்தில் நார்ச்சத்து அதிகம். ஃப்ரீ ரேடிகல் என்னும் முற்று பெறாத அயனிகளை அகற்றக்கூடிய பண்பு கொண்டது. உடலிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி அவற்றை எளிதாக வெளியேற்றிவிடுகிறது. முற்று பெறாத அயனிகளுக்கு எதிராக இயங்குவதால், உடல் சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் காத்துக் கொள்கிறது. சீரகத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள்) உடல் முதுமையடைவதை தவிர்க்க உதவுகின்றன. நாம் சாப்பிடும் உணவிலிருந்து தேவையான சத்துகளை தோல் எடுத்துக்கொள்ளுவதற்கு சீரக நீர் உதவுகிறது. 
 
கல்லீரலுக்கு உதவி
 
உடலிலுள்ள நச்சுத்தன்மையை சீரக நீர் அகற்றுவதால் கல்லீரல் போன்ற உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News