ஈசியா செய்யலாம் பீ நட் பட்டர்
Home Made Peanut Butter recipe
வீட்டிலேயே ஈசியா பீ நட் பட்டர் (Peanut Butter) எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்கலை - ஒரு பௌல்
கடலை எண்ணெய் - அரை டீஸ்பூன்
தேன் - அரை டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸி ஜாரில், வேர்கடலை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வேர்கடலை அரைந்து அதில் இருந்து எண்ணெய் வெளிப்படும். அந்த பதத்தில், தேன், உப்பு, கடலை எண்ணெய் சேர்த்து மிதமான வேகத்தில் மீண்டும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பிரெட் மீது தடவி சாப்பிடக் கொடுக்கலாம். சுவையான மற்றும் சத்து நிறைந்த பீ நட் பட்டரை விரும்பி சாப்பிடுவார்கள்.
You'r reading ஈசியா செய்யலாம் பீ நட் பட்டர் Originally posted on The Subeditor Tamil
More Ruchi corner News
READ MORE ABOUT :