யம்மி.. சாக்கோ சிப்ஸ் ரெசிபி

Yummy Choco Chips recipe

by Isaivaani, Apr 6, 2019, 23:11 PM IST

கேக், மில்க்ஷேக், ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளில் அழகுக்காகவும், சுவைக்காகவும் தூவப்படும் சாக்கோ சிப்ஸ் வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் - 125 கிராம்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
அதன்மீது, மற்றொரு பாத்திரத்தை வைத்து, அதில் டார்க் சாக்லேட் போட்டு உருக வைக்கவும்.

டார்க் சாக்லேட் நன்றாக உருகியதும், அதனை ஒரு பைப்பிங் பேக்கில் போட்டு கோன் போன்று தயார் செய்து வைக்கவும்.

பிறகு, ஒரு பட்டர் பேப்பரில் முழுவதும் கோனைக் கொண்டு துளி துளியாக சாக்லேட் வைக்கவும்.

இதனை, அப்படியே 5 முதல் 10 நிமிடங்கள் வரை ப்ரிட்ஜ் ப்ரீசரில் வைத்தால் சாக்லேட் துளிகள் கெட்டியாகிவிடும்.

பின்னர், பட்டர் பேப்பரை வெளியில் எடுத்து, சாக்லேட் துளிகளை கையால் எடுத்து சேகரித்து பிரிட்ஜில் வைத்து அவ்வபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்ளோதாங்க.. சாக்லேட் சிப்ஸ் ரெடி..!

You'r reading யம்மி.. சாக்கோ சிப்ஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை