அடடே.. மட்டன் ஈரல் வறுவல் ரெசிபி

அசைவப் பிரியர்களே.. உங்களுக்கு பிடித்த மட்டன் ஈரல் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மட்டன் ஈரல் துண்டுகள் - 500 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கறி மசாலா - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பல்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேவையான பொருட்கள்:

ஒரு கிண்ணத்தில், ஈரல், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

தற்போது, தக்காளி சேர்த்து வதக்கியதும், அதனுடன் ஈரல் சேர்த்து கிளறவும்.
பின்னர், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கறி மசாலா, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைக்கவும்.

இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி..!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Crispy-Egg-Bonda-Recipe
மொறு மொறு முட்டை போண்டா ரெசிபி
Hot-Serve-Onion-Bonda-recipe
சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி
Crispy-Horse-Gram-Vadai-Recipe
சுவையான கொள்ளு வடை ரெசிபி
Tasty-Mutton-Liver-Gravy-Recipe
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெசிபி
Tasty-Drumstick-masala-curry
சுவையான முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபி
Tasty-Veg-Kheema-Masala-Recipe
இதை ட்ரை பண்ணுங்க.. வெஜ் கீமா மசாலா ரெசிபி
Tasty-Chicken-Lollipop-Recipes
அசத்தலான சுவையில சிக்கன் லாலிபாப் ரெசிபி
Tasty-Tandoori-Chicken-Recipe
ஈசியா செய்யலாம் தந்தூரி சிக்கன் ரெசிபி
Crispy-Crab-Lollipop-Recipe
ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் நண்டு லாலிபாப் ரெசிபி
Tasty-Chapathi-Noodles-Recipe
குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி

Tag Clouds