குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட்-தேங்காய் மில்க் ஷேக் ரெசிபி

Chocolate Coconut Milkshake Recipe

by Isaivaani, Apr 11, 2019, 23:22 PM IST

குழந்தைகள் விரும்பி பருகக்கூடிய சாக்லேட் தேங்காய் மில்க் ஷேக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - ஒரு கப்

வென்னிலா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்கூப்

சாக்லேட் ஐஸ்கிரீம் - ஒரு ஸ்கூப்

சாக்லேட் சிரப் - ஒரு டேபிள் ஸ்பூன்

மில்க் சாக்லேட் துருவல் - சிறிதளவு

செய்முறை:

முதலில், மிக்ஸியில் தேங்காய்ப்பால், வென்னிலா ஐஸ்கிரீம், சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப் சேர்த்து நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.

இதனை தம்ளர்களில் ஊற்றி சிறிது நேரம் ப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

அதன்மீது, மில்க் சாக்லேட் துருவல் மற்றும் சாக்லேட் சிரம் ஊற்றி அலங்கரித்து பருகவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சாக்லேட் தேங்காய் மில்க் ஷேக் ரெடி..!

You'r reading குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட்-தேங்காய் மில்க் ஷேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை