படையப்பாவுக்கு நீலாம்பரி தர்பாருக்கு நயன்தாரா? தர்பார் அப்டேட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்துவருகிறது. அப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

nayanthara

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினி. ரஜினியின் 167வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி துவங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்பொழுது ரஜினியுடன் நயன்தாராவுக்கான காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் நடிக்கவில்லையாம். நெகட்டிவ் கேரக்டர் ஒன்றில் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்கிற தகவல் கசிந்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன்தாரா. பின் குசேலனில் இருவரும் நடிகர் - நடிகையாகவே நடித்தனர். தவிர, சிவாஜி படத்தின் அறிமுக பாடலில் ரஜினியுடன் நடனமாடினார். பின், மீண்டும் ரஜினி - நயன் காமினேஷன் தற்பொழுது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் தர்பார் படத்தில் மட்டுமல்லாமல், விஜய்யுடன் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் நயன்தாரா என்பது கூடுதல் தகவல்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
3-time-Delhi-cm-Sheila-Dixit-passed-away-pm-Modi-Cong-senior-leader-Sonia-Gandhi-pay-tribute
3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மறைவு; பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி
How-to-find-time-for-social-life
பரபரப்பின் மத்தியில் நமக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குவது எப்படி?
What-not-to-eat-during-monsoon-season
மழை வருது... மழை வருது... இவற்றை சாப்பிடாதீங்க!
Indian-cricket-wicket-keeper-ms-Dhoni-pulls-out-West-Indies-tour-decides-serve-army-2-months
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு
MLA-constituency-fund-raised-3-crores-cm-announced-assembly
எம்.எல்.ஏ. தொகுதி நிதி மூன்று கோடியாக உயர்வு; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
Heavy-rain-in-Kerala--red-alert-issued-and-dams-open-in-advance
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு
Priyanka-meets-firing-victims-rsquo--kin-standoff-UP-govt
சொன்னதை செய்த பிரியங்கா; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
Trichy-hotel-servant-arrested-who-was-phone-Call-to-police-control-room-and-threatened-to-abduct-CM-edappadi-Palani-Samy
முதல்வர் எடப்பாடியை கடத்தப்போவதாக மிரட்டல்; திருச்சி ஹோட்டல் தொழிலாளி கைது
Oppo-K3-With-Ultra-Clear-Night-View-will-be-available-from-July-23
கேம் பூஸ்ட்டுடன் கூடிய ஆப்போ கே3 ஸ்மார்ட்போன் விற்பனை
NIA-officials-raids-in-Chennai-Nellai-Theni-and-Ramanathapuram
சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
Tag Clouds