உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் ரெசிபி

Healthy Mint Drink Recipe

by Isaivaani, May 11, 2019, 23:10 PM IST

உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் எளிதில் எப்படி செய்யலாம் என்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கைப்பிடி

சர்க்கரை சிரப் - ஒரு கப்

கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

சோடா தண்ணீர் - ஒரு தம்ளர்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலைகள், சர்க்கரை சிரப், கருப்பு உப்பு, உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, சோடா தண்ணீர் சேர்த்து மீண்டும் கட்டி இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.

அவ்ளோதாங்க.. புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் பருக தயார்..!

You'r reading உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை