ஸியோமியின் அடுத்த அதிரடி; குறைந்த விலைக்கு 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஸியோமி நிறுவனம் ரெட்மி எனும் ஸ்மார்ட் போன் வகைகளை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 7எஸ் எனும் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 48 எம்.பி. கேமரா திறன் கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் விலை வெறும் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

6.3 இன்ச் அகல திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ்5, ஸ்நாப்டிராகன் 660 பிராசஸர் என பல அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த ரெட்மி நோட் 7எஸ், 4000 எம்.ஏ.எச் எனும் பிரம்மாண்ட பேட்டரி கட்டமைப்புடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் குயிக் சார்ஜ் 4 இருப்பதால், அதிவிரைவில் சார்ஜ் செய்யமுடியும்.

3ஜி.பி., ரேம் 32 ஜி.பி., இண்டர்னல் மெமரியுடன் உள்ள ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் வெர்ஷன் 12,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் மே 23ம் தேதி முதல் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதால், இப்போதிருந்தே ரசிகர்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமுடன் உள்ளனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

LG-TO-ANNOUNCE-A-NEW-W-SERIES-OF-SMARTPHONES-IN-INDIA
எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம்
YouTube-Tests-Hiding-Comments-by-Default-on-Android
யூடியூப்: கமெண்ட் பகுதியில் சோதனை முயற்சி
IMEI-numbers-could-help-track-stolen-mobiles
ஸ்மார்ட்போனும் ஐஎம்இஐ எண்ணும்: வருகிறது புதிய பதிவேடு
Selfie-facts-and-moments-from-around-the-world
எங்கெங்கு செல்லினும் செல்ஃபியடா
Nubia-Red-Magic-3-Gaming-Phone-With-8K-Video-Recording-Support
8K வீடியோ பதிவு செய்யக்கூடிய மேஜிக்3 போன் அறிமுகம்
Xiaomi-ending-MIUI-beta-programme-for-all-devices-from-July-1
மியூஐ பீட்டா பயனர் இடைமுகம் ஜூலை முதல் ரத்தாகிறது
Samsung-Galaxy-A30-now-sells-for-Rs-13-990-India
கேலக்ஸி ஏ30: விலைகுறைப்பு! எதை வாங்கலாம்?
Facebook-Study-app-that-pays-users-for-data-on-app-usage
பயனர் பற்றிய தகவலுக்கு பணம்: ஃபேஸ்புக்கின் ஸ்டடி செயலி
Samsung-Galaxy-M40-launched
இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளே கொண்ட கேலக்ஸி எம்40 போன் அறிமுகம்
Facebook-awards-Manipuri-man-3-point-47-lakh-for-spotting-WhatsApp-bug
வீடியோவுக்கு மாறும் ஆடியோ அழைப்பு: 3 லட்சம் வெகுமதி பெற்ற இந்தியர்

Tag Clouds