அசத்தலான சுவையில் பன்னீர் புலாவ் ரெசிபி

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு புதுவகையாக பன்னீர் புலாவ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பன்னீர் - 100 கிராம்

தக்காளி - 2

வெங்காயம் - 2

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 2

கேரட் - ஒன்று

பட்டாணி - கால் கப்

பிரியாணி இலை - 2

பட்டை - 1

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

சோம்பு - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

நெய்

உப்பு

செய்முறை:

முதலில், வாணலியில் நெய்விட்டு சூடாகி உருகியதும், பன்னீர் சேர்த்து மிதமான பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.

ஒரு கனமான பாத்திரத்தில், எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொரிக்கவும்.

பிறகு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்ததாக, தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், நறுக்கி வைத்த கேரட், பட்டாணி சேர்த்து வதக்கி வேக வைக்கவும்.
பட்டாணி வெந்ததும் ஒரு தம்ளர் அரிசிக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் என்கிற வீதத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிவந்ததும், கழுவி ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேகவிடவும்.

அரிசி பாதி வெந்ததும் வறுத்து வைத்த பன்னீரை சேர்த்து கிளறி வேகவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் புலாவ் ரெடி..!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Crispy-Dates-Sweet-Recipe
மொறு மொறு பேரிச்சம்பழம் ஸ்வீட் ரெசிபி
Delicious-Wheat-Gulab-Jamun-Recipe
சுவையான கோதுமை குலாப் ஜாமூன் ரெசிபி
Yummy-Eggless-Rava-Cake-Recipe
முட்டை இல்லா மிருதுவான ரவை கேக் ரெசிபி
Crispy-Kurkure-Snack-Recipe
கிறிஸ்பி குர்க்குரே செய்யலாம் வாங்க..
Healthy-Paneer-Spinach-Chutney-Recipe
சுவையான பன்னீர் கீரை துவையல் ரெசிபி
Yummy-Vannila-Sponge-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா ஸ்பாஞ் கேக் ரெசிபி
Crispy-Green-Lentils-Vada-Recipe
சுவையான பச்சைப் பயறு வடை ரெசிபி
Healthy-Cow-Peas-Sundal-Recipe
ஆரோக்கியம் நிறைந்த காராமணி சுண்டல் ரெசிபி
Yummy-white-Sesame-Mittai-Recipe
சத்தான வெள்ளை எள் மிட்டாய் ரெசிபி
Tasty-Tawa-Pulao-Recipe
சும்மா ட்ரை பண்ணுங்க.. தவா புலாவ் ரெசிபி

Tag Clouds