டேஸ்டி பன்னீர் - ரோஸ் ஜாமூன் ரெசிபி

Tasty Paneer Rose Flavoured Gulab jamun Recipe

by Isaivaani, Jun 2, 2019, 15:32 PM IST

வீட்டிலேயே ஸ்வீட் ஸ்டால் ஸ்டைலில் சுவையான பன்னீர் ரோஸ் ஜாமூன் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நிறைந்த பால் - அரை லிட்டர்

எலுமிச்சைப் பழம் - 2

சர்க்கரை - 2 கப்

ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன்

ரோஜா இதழ்கள் - சிறு துளி

ஏலக்காய் தூள் - சிறிதளவு

சோள மாவு - 1 டீஸ்பூன்

பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

ரோஸ் புட் கலர் - சில துளி

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சூடு செய்யவும். பால் காய்ந்து பொங்கி வரும்போது நன்றாக கலக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

பால் திரிய ஆரம்பித்ததும் இன்னும் சில நிமிடங்களுக்கு சூடு செய்து பாலை நன்றாக திரிய வைக்கும்.

பிறகு, ஒரு வெள்ளை துணியில் பாலை வடிகட்டவும். சுமார், அரை மணி நேரம் வரை வைத்து தண்ணீர் முழுவதையும் எடுத்துவிடவும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கரைய வைக்கவும். அத்துடன், ரோஸ் எசென்ஸ், காய்ந்த ரோஜா இதழ்கள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறி ஜீரா தயாரிக்கவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் திரிஞ்ச பாலை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். அத்துடன், சோள மாவு, பால் பவுடர், ரோஸ் புட் கலர் சேர்த்து ஸ்மூத்தாகும் வரை பிசைந்துக் கொள்ளவும்.

அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பீய்த்து எடுத்து உருட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் மீண்டும் ஜீராவை வைத்து சூடு செய்து, அதில் உருண்டைகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.

அவ்ளோதாங்க சுவையான பன்னீர் ரோஸ் குலாப் ஜாமூன் ரெடி..!

You'r reading டேஸ்டி பன்னீர் - ரோஸ் ஜாமூன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை