வேதனையை உண்டாக்கும் இளம் பருவ நரை..பக்கவிளைவு இல்லாத குறிப்புகள்

Apr 30, 2018, 16:08 PM IST

இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். அதனை மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணாகும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் இயற்கை முறையில் செய்யப்படுவது பக்கவிளைவுகள் இல்லாத  நிரந்தர பலனை கொடுக்கும்.

நெல்லிக்காய் சிறிய துண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் மிதமான  தீயில் வைத்து சூடுபடுத்தவும். இதனை ஆறவைத்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். இதனை இரவு நேரத்தில் தலைக்கு தேய்த்து  மசாக் செய்து காலையில் எழுந்ததும் அலச வேண்டும்.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்தவும் கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும், வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில்  அடைத்து கொள்ளவும். இந்த ஆயிலை இரவில் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும்படி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில்  எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள்.

பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே உலர்த்தி 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். பின் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும். வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும் பயன்படுத்தும் முறை இதை வாரத்திற்கு இரண்டு முறை என  கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வேதனையை உண்டாக்கும் இளம் பருவ நரை..பக்கவிளைவு இல்லாத குறிப்புகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை