பயிற்சியாளராக அவதாரமெடுக்கும் ரிக்கி பாண்டிங்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா அணி டி -20 போட்டிகளில் தொடர்ந்து திணறித் தான் விளையாடி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் விரக்தியில் உள்ளது.

Jan 2, 2018, 15:14 PM IST

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா அணி டி -20 போட்டிகளில் தொடர்ந்து திணறித் தான் விளையாடி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் விரக்தியில் உள்ளது.

இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக டி20 போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசணை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரிக்கிபாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களின் ஒருவரான ரிக்கி பாண்டிங் இரண்டு உலக கோப்பையை (2003, 2007) பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் 8 வருடம் அணியை கம்பீரமாக வழி நடத்தி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறந்து விளங்கியவர்.

டி20 அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிப்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆர்வத்துடன் இருக்கிறது. பாண்டிங் ஏற்கெனவே இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் உதவி பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.

தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் லீமேனின் ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு முடிவடைகிறது. இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் உடன்தீவிர பேச்சு நடத்தி வருகிறது. ரிக்கி பாண்டிங் ஏற்கெனவே உதவி பயிற்சியாளராக இருப்பதால் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

You'r reading பயிற்சியாளராக அவதாரமெடுக்கும் ரிக்கி பாண்டிங்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை