மார்ச்சில் வருகிறது மூன்று காமிராக்களுடன் கூடிய மி9

MI 9 phone with three cameras releasing March

by SAM ASIR, Jan 5, 2019, 17:57 PM IST

பின்பக்கத்தில் 48 எம்பி, 12 எம்பி மற்றும் 3 டி டைம் ஆஃப் ஃப்ளைட் ஆற்றலுடன் கூடிய மூன்று காமிராக்களை பின்புறத்திலும்ம், தன்படம் எடுக்கக்கூடிய 24 எம்பி காமிராவை முன்புறத்திலும் கொண்ட மி9 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் 6 ஜிபி இயக்கவேகத்துடனும் 128 ஜிபி சேமிப்பளவுடனும் இது கிடைக்கக்கூடுமென்றும், அறிமுக விழாவில் கூடுதல் விவரங்கள் கிடைக்குமெனவும் தெரிகிறது. 3500 mAh மின்னாற்றல் கொண்ட அகற்றப்பட முடியாத பேட்டரி உண்டு.

6.4 அங்குல எஃப்ஹெச்டி தரத்தில் 19:9 என்ற விகிதாச்சாரத்துடன் AMOLED தொடுதிரையுடன் கூடிய மி9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிரகோன் 855 பிராசஸருடன் கிடைக்கும். இப்போன் 5 ஜி இணைய வேகம் கொண்டதாக இருக்கும். இதன் விலை 30,000 ரூபாயாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மார்ச்சில் வருகிறது மூன்று காமிராக்களுடன் கூடிய மி9 Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை