அழகாக சிரிப்பது எப்படி?

Healthy Gums - Know Ways Of It!

by SAM ASIR, Jul 3, 2019, 17:21 PM IST

'சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்' என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல்.

'சிரிப்பு' மற்றவர்களை வசீகரிக்கக்கூடிய ஒன்று. நாம் சிரிப்பது மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கவேண்டும். அதாவது 'புன்னகை இருக்கும்போது பொன்நகை எதற்கு?' என்பதுபோல நம் புன்னகை அழகாய் இருக்கவேண்டும். புன்னகை அழகாக இருக்கவேண்டுமானால், பற்கள், நாக்கு மற்றும் ஈறுகள் ஆகியவற்றை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்.

ஒழுங்காக பல் துலக்குதல், பல் இடுக்குகளை சுத்தம் செய்தல், வாயை சுத்திகரிக்கும் திரவம் (மவுத் வாஷ்) கொண்டு கொப்பளித்தல் ஆகிவற்றை செய்து வந்தால் வாய் ஆரோக்கியமாக இருக்கும். வாய் ஆரோக்கியமாக இருந்தால் நம் சிரிப்பும் அழகாக இருக்கும்.

ஈறுகளை பாதுகாக்கும் எளிய வழிகள்:

பல் துலக்குதல்: வாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல் துலக்குதல் இன்றியமையாதது. அனுதினமும் இருமுறை பல் துலக்குவதால் பற்களும் ஈறுகளும் பாதுகாக்கப்படும். பற்களை சரியான முறையில் துலக்க வேண்டும். மென்மையான இழைகள் கொண்ட, தரமான தயாரிப்பான பிரஷை வாங்கி பயன்படுத்த வேண்டும். மிகவும் அழுத்தி பல் துலக்கக்கூடாது. குறைந்தது இரண்டு நிமிடமாவது ஓரிடத்தில் துலக்க வேண்டும். அப்போதுதான் வாயின் அந்தப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் (பாக்டீரியா) கொல்லப்படும். அதன் மூலம் பற்சிதைவு, ஈறுகள் பாதிக்கப்படுதல் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இடுக்குகளை சுத்தம் செய்தல்: பல் துலக்கும்போது, பற்களின் இடையே உள்ள இடுக்குகளுக்குள் பிரஷ்ஷின் இழைகள் நுழையாது. ஆகவே, பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் தங்கிவிடும். இந்தத் துணுக்குகளில் கிருமிகள் உருவாகி பற்களையும் ஈறுகளையும் பாதிக்கும். ஆகவே, தினமும் பல் இடுக்குகளை சுத்தம் செய்வது நல்லது. இது சற்று கடினமாக தெரிந்தால் கூட தவிர்க்காமல் செய்து விடுங்கள். பல் இடுக்குகளை சுத்தம் செய்ய பிரத்யேகமாக கிடைக்கும் இழைகளை (dental floss) பயன்படுத்துங்கள். இதன் மூலம் பற்களில் காரை உருவாவதும், காரைகள் இறுகி கிருமிகளின் கூடாரமாக மாறுவதும் தவிர்க்கப்படும்.

கொப்பளித்தல்: வாயை சுத்தம் செய்வதற்கும், கிருமிகள் அண்டாமல் காப்பதற்கும் அதற்கான திரவத்தை (mouthwash) பயன்படுத்தி நன்றாக கொப்பளிக்க வேண்டும். தரமான மவுத்வாஷ் திரவத்தை மட்டும் பயன்படுத்தவும்.

சர்க்கரையில்லா சூயிங்கம்:

ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்னரும் 20 நிமிட நேரத்துக்கு சூயிங்கம் மெல்வது நல்லது. சர்க்கரை சேர்க்காத சூயிங்கம் மென்றால் வாய் சுத்தமாவதுடன், புத்துணர்வும் பெறும். சாப்பிட்ட உடன் பல் துலக்க முடியாத நேரங்களில் மட்டும் சூயிங்கம் மெல்லவும். தொடர்ந்து சூயிங்கம் மெல்வது தாடையை பலவீனப்படுத்தி, பிரச்னைகளை உருவாக்கக்கூடும்.

இப்போ சிரிங்க... அழகா இருக்கும்!

இரத்தக் குழாய்களை காத்திடும் பழங்கள்

You'r reading அழகாக சிரிப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை