காங். ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம்- ராகுல் அதிரடி அறிவிப்பு!

Cong. to commit to a Minimum Income Guarantee for every poor person, says Rahul

by Mathivanan, Jan 28, 2019, 18:45 PM IST

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானம் ஒன்றை ஏழைகளுக்கு உறுதி செய்யும். ஏழைகள் அனைவருமே சராசரியான வருமானத்தை பெற நடவடிக்கை எடுப்போம்.

காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையால் நமது நாட்டி பசியும் வறுமையும் இனி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதையே தமது ட்விட்டர் பக்கத்திலும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

You'r reading காங். ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம்- ராகுல் அதிரடி அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை