அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று (ஜன.20) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், நேற்றுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம், மற்றும் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம், மற்றும் இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை பற்றிய விபரங்களை கீழே காண்போம்;-
சென்னை டூ மதுரை-
பழைய கட்டணம்- ரூ.325,
புதிய கட்டணம்- ரூ.510,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.185.
சென்னை டூ சேலம்-
பழைய கட்டணம்- ரூ.240,
புதிய கட்டணம்- ரூ.383,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.143.
சென்னை டூ திருச்சி-
பழைய கட்டணம்-ரூ. 200,
புதிய கட்டணம்- ரூ.308,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.108.
சென்னை டூ கோவை-
பழைய கட்டணம்- ரூ.400,
புதிய கட்டணம்- ரூ.600,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.200.
சென்னை டூ கன்னியாகுமரி -
பழைய கட்டணம்- ரூ.505,
புதிய கட்டணம்- ரூ.755,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.250.
சென்னை டூ திருநெல்வேலி-
பழைய கட்டணம்- ரூ.440,
புதிய கட்டணம்- ரூ.664,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.224.
சென்னை டூ திருவண்ணாமலை-
பழைய கட்டணம்- ரூ.150,
புதிய கட்டணம்- ரூ.206,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.56.
சென்னை டூ புதுச்சேரி-
பழைய கட்டணம்- ரூ.125,
புதிய கட்டணம்- ரூ.196,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.71.
சென்னை டூ காரைக்குடி-
பழைய கட்டணம்- ரூ.300,
புதிய கட்டணம்- ரூ.480,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.180.
சென்னை டூ ஓசூர்-
பழைய கட்டணம்- ரூ.225,
புதிய கட்டணம்- ரூ.350,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.125.
சென்னை டூ கும்பகோணம்-
பழைய கட்டணம்- ரூ.215,
புதிய கட்டணம்- ரூ.345,
இனி அதிகம் செலுத்த வேண்டிய தொகை;- ரூ.130.
மேலும் சென்னை நகரில் இயக்கப்படும் பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டண விபரம்;-
சாதாரண பேருந்துகளில்- ரூ.6 முதல் ரூ.25 வரையிலும்,
எக்ஸ்பிரஸ் பேருந்துகளில்- ரூ.9 முதல் ரூ.37 வரையிலும்,
டீலக்ஸ் பேருந்துகளில்- ரூ.13 முதல் ரூ.51 வரையிலும்,
இரவுநேர பேருந்துகளில்- ரூ.11 முதல் ரூ.49 வரையிலும்,
வால்வோ பேருந்துகளில்- ரூ.28 முதல் ரூ.159 வரையிலும் இனி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.