புயல் எச்சரிக்கை எதிரொலி புதுச்சேரி கடலில் குளிக்க தடை

Cyclone alert Please dont go to Pondichery Beach says police

by Mari S, Apr 28, 2019, 08:41 AM IST

புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் புதுச்சேரியை நோக்கி வருவதால், கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரி கடலில் குளிக்க புதுச்சேரி போலீசார் மற்றும் சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், புயலின் தாக்கம் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதோடு, கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் யாரும் கடலுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

12 மணி நேரத்தில்...உருவாகிறது ஃபனி புயல்! –எச்சரிக்கை நடவடிக்கைகள் ‘ஜரூர்’

You'r reading புயல் எச்சரிக்கை எதிரொலி புதுச்சேரி கடலில் குளிக்க தடை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை