யார் இந்த பனி மனிதன் யதி? இந்திய ராணுவம் குழம்பியதா, குழப்புகிறதா?

indian army revealed snowman foot print

by Subramanian, May 3, 2019, 07:47 AM IST

யதி என்பது தெற்காசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு. ஆனால் உண்மையில் யதி இருக்கிறதா என்றால் யாருக்கும் விடை தெரியாது. யதி என்பவன் பேருருவம் படைத்த பனிமனிதன். இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் மக்கள் தங்களது வாரிசுகளுக்கு பனிமனிதனை மையப்படுத்தி ஏராளமான கதைகள் சொல்வது உண்டு. அதேபோல் யதி இருந்தற்கு அல்லது இருப்பதற்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதுதான் இதுவரையிலான உண்மை.

இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவத்தின் தற்போதைய ஒரு டிவிட் பனிமனிதனை மீண்டும் பிரபலமாக்கி விட்டது. இந்திய ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய காலடித் தடத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டது. மேலும், கடந்த ஏப்ரல் 9ம் தேதி இமயமலைத் தொடரின் மக்காலு சிகரத்தில் மர்மமான காலடித் தடத்தை இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழு பார்த்தது. அந்த காலடி தடம் 32x12 இன்ச் அளவில் இருந்தது. அது எட்டி எனப்படும் பனிமனிதனின் கால்தடம் என்றும் அதில் பதிவு செய்து இருந்தது.

இந்திய ராணுவத்தின் இந்த டிவிட், பனிமனிதன் கதைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து விட்டது. காலடித் தடத்தை பார்த்த அனைவரும் பனிமனிதன் உண்மையில் இருப்பானோ என்று நினைக்க தொடங்கி விட்டனர். ஆனால் பனிமனிதன் என்பது எல்லாம் கதைதான். அந்த காலடித்தடம் கரடி உடையது என்று உண்மையை போட்டு உடைத்து விட்டது நேபாளம்.
நேபாள ராணுவம் இது குறித்து கூறுகையில், அந்த கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்திய ராணுவத்துடன் நாங்களும் இருந்தோம். அந்த கால் தடம் குறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது, அது கரடியின் கால்தடம் என அவர்கள் கூறினர் என்று தெரிவித்தது.

இதற்கு முன் 2013ல் யதி குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது ஆய்வின் முடிவில் இமாலயன் யதி என்பது பழுப்பு நிற கரடியின் ஒரு வகையாக இருக்கலாம் என்று கூறி இருந்தார். தற்போது நேபாள ராணுவத்தின் விளக்கமும் அதனை உறுதி செய்வது போல் அமைந்து விட்டது.

பனிமனிதன் என்பது கட்டுக்கதை என்பது உறுதியாகி விட்டதால் இந்திய ராணுவத்தை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்திய ராணுவத்தின் டிவிட்டர் பக்கத்தை சுமார் 60 லட்சம் பேர் பின்தொடருகின்றனர். அதனால் அந்த பக்கத்தில் வெளியிடப்படும் எந்தவொரு சின்ன செய்தியும் மக்களிடம் வேகமாக சென்று விடும். இதனால் இந்திய ராணுவம் இனிமேலாவது எந்தவொரு செய்தியையும் அதன் உண்மை தன்மை தெரியாமல் வெளியிடக் கூடாது என்று பலரும் அறிவுறுத்த தொடங்கி விட்டனர்.

இதனையடுத்து இந்திய ராணுவத்தின் பனிமனிதன் டிவிட்டை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

அஜித்திடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை... பாலிவுட்டுக்கு தாவும் விஷ்ணுவர்தன்

You'r reading யார் இந்த பனி மனிதன் யதி? இந்திய ராணுவம் குழம்பியதா, குழப்புகிறதா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை