ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

inx media case:SC dismissed p.chidambarams anticipatory bail petition

by Nagaraj, Aug 26, 2019, 14:03 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சடி செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்து விட்டது.இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் கேட்டும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன் ஜாமீன் ரத்து உத்தரவுக்கு எதிராகவும் மேல் முறையீட்டு மனு மறுநாள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ப.சிதம்பரத்தின் மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, மேலும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, ப.சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். எனவே முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு காலாவதியாகி விட்டது என்பது தானே அர்த்தம் என கேள்வி எழுப்பினார். இதனால், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஜாமீன் பெற வழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி பானுமதி அறிவுறுத்தினார்.

ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைப்பது எளிதல்ல என்று கூறப் படுகிறது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதும் இன்று சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் ப. சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க சிபிஐயும் முயற்சித்து வருகிறது.

4 நாள் காவலில் எடுத்து விசாரித்த போதும், ப.சிதம்பரம் போதிய ஒத்துழைப்பும், கேள்விகளுக்கு உரிய பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, காவல் முடிந்து இன்று மாலைக்குள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படும் போது தான் ஜாமீன் கிடைக்குமா? சிபிஐ காவலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்படுமா?அல்லது திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுவாரா? என்பது தெரியும்.

ட்விட்டர் கணக்கு இருக்கிறதா? சிதம்பரத்திடம் கேட்ட கேள்வி; சி.பி.ஐ. மீது கபில்சிபல் குற்றச்சாட்டு

You'r reading ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை