காஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை டிரம்ப் பல்டி

Donald Trump says, India and Pakistan can handle Kashmir issue

by Nagaraj, Aug 26, 2019, 20:55 PM IST

காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார்.

பிரான்சில் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், மனித நேயம் மற்றும் அமைதிக்காக பாடுபடும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா உள்ளன. இரு நாடுகளின் உறவு வலுவாக உள்ளது. தொடர்ந்து இருவரும் இணைந்து பாடுபடுவோம்.

காஷ்மீர் இரு நாட்டு பிரச்சனை. இந்தப் பிரச்னையில் பிற நாடுகளின் மத்தியஸ்தம் தேவையில்லை. பாகிஸ்தானுடனான பிரச்சனை விரைவில் தீரும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் , விவகாரம் குறித்து மோடியுடன் பேசினேன். காஷ்மீர் என்பது இரு நாட்டு பிரச்சனை. இரு நாடுகளும் கருத்து வேற்றுமைகளை களைந்து பேசித் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சிறந்த நட்பு நாடாக திகழும் என டிரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதம் முன்பு காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டால் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில்,டிரம்ப் தமது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading காஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை டிரம்ப் பல்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை