பயணிகளின் கவனத்திற்கு.... கொரோனாவுக்கு பிறகு 500 ரயில்கள் ரத்து ...!

by Nishanth, Sep 4, 2020, 14:39 PM IST

கொரோனா காரணமாக இந்திய ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் தயாராகி வருகின்றன. இந்திய ரயில்வே அதிகாரிகளும், மும்பை ஐஐடியில் உள்ள நிபுணர்களும் சேர்ந்து ஒரு புதிய நேர அட்டவணையை தயாரித்துள்ளனர். இந்த அட்டவணையின் படி தான் அடுத்த வருடம் முதல் ரயில்கள் ஓடும். வருமானத்தை அதிகரிப்பதற்காக லாபம் இல்லாமல் ஓடும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டாப்புகளும் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் அடுத்த வருடம் தான் ரெயில் போக்குவரத்து முழுமையாக தொடங்க வாய்ப்புள்ளது. அப்போது புதிய நேர அட்டவணையின் படியே ரயில்கள் ஓடும். ஆனால் டிக்கெட் கட்டணத்தை கூட்ட இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கட்டணத்தை கூட்டாமல் ₹1500 கோடி வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும். நீண்ட தூரம் ஓடும் ரயில்களில் 200 கிலோ மீட்டருக்கு உள்ளில் முக்கிய நகரங்களில் மட்டுமே ஸ்டாப் இருக்கும். மேலும் சரக்கு ரயில் பாதையில் சரக்கு ரயிலின் வேகத்தை 15% அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் லாபத்தை அதிகரிக்க முடியும் என ரயில்வே கருதுகிறது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை