மேட்ச் பிக்ஸிங்-இல் பாஜக, அதிமுக : நாடாளுமன்றத்தில் மோதல்

மோடி அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு தடையாக இருக்கும் அதிமுக எம்.பி.க்கள், பாஜக-வுடன் அதிமுக மேட்ச் பிக்ஸிங் செய்து கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Mar 28, 2018, 08:55 AM IST

மோடி அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு தடையாக இருக்கும் அதிமுக எம்.பி.க்கள், பாஜக-வுடன் அதிமுக மேட்ச் பிக்ஸிங் செய்து கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக அவர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்றும் அவை 10.30 மணிக்கு கூடியதும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால், “மத்திய அரசுக்கு ஆதரவாகவே அதிமுக இவ்வாறு செயல்படுகிறது என்றும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினை கொண்டு வரவிடாமல் தடுக்கும் முயற்சி இது என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

அப்போது, “நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினை தடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தில் பாஜக-வுடன் அதிமுக ‘மேட்ச் பிக்சிங்’ செய்து கொண்டு அவையைச் செயல்பட விடாமல் முடக்குகிறது” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஆவேசத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மேட்ச் பிக்ஸிங்-இல் பாஜக, அதிமுக : நாடாளுமன்றத்தில் மோதல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை