புதியக் கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதி வழங்க முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு புதிய கல்விக்கொள்கையை அறிவித்தது. இது குறித்து ஒவ்வொரு மாநிலமும் கருத்துகளை தெரிவித்து வந்துள்ளது. தமிழ் நாட்டில் பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரத்தில் உயர்கல்வியிலும் சில திட்டங்களை தமிழக அரசு ஏற்க தயங்கி வருகிறது.
இது போன்ற சூழ்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு பல சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. அதில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தாவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கையின்படி பல்கலைக்கழக மானியக்குழு ஏற்படுத்தியுள்ள வித்வான் அல்லது இந்திய ஆராய்ச்சி தகவல் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றில் உயர்கல்வி
நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.