இந்தியாவின் முதல் படுக்கை வசதி வந்தேபாரத் ரயில் : லக்னோ - மும்பை இடையே ஓட்டம்!

India-s-first-sleeper-train-Vande-Bharat-Runs-between-Lucknow-and-Mumbai

இந்திய ரயில்வேயின் நவீன அம்சமாக வந்தேபாரத் ரயில் பார்க்கப்படுகிறது . நாட்டின் பல நகரங்களுக்கு இடையே இந்த ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் வந்தேபாரத் ரயில் செல்லும். இதுவரை, இருக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருந்தன. தற்போது, படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தேபாரத் ரயில் லக்னோவில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ரயிலின் பயண அட்டவணை வெளியிடப்பட்டு , ஜூலை மாதம் முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கான்பூர், மதுரா, ஆக்ரா வழியாக இந்த ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது. 20 கோச்சுகளுடன் 1,200 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். பின்னர், படிப்படியாக நாட்டின் பிற நகரங்களுக்கு படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளளது. நாட்டின் முதல் வந்தேபாரத் ரயிலும் உத்தரபிரதேசத்தில் இருந்துதான் இயக்கப்பட்டது. அதாவது, வாரணாசியில் இருந்து முதல் வந்தேபாரத் ரயில் டெல்லிக்கு புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை விட பயணிகள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது.