கேரள அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி: குழந்தைகள் கேட்டது கிடைத்தது

Egg-biryani-in-Kerala-anganwadis-Children-get-what-they-asked-for

கேரளாவில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் முட்டை பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி வழங்கும்படி ஆஷிக் என்ற சிறுவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தொடர்ந்து, கேரள அரசு அங்கன்வாடி உணவுப் பட்டியலில் மாற்றங்கள் கொண்டுவர பரிசீலித்தது.
தற்போது புலாவ், பருப்பு பாயாசம், சோயா கறி மற்றும் சத்து உருண்டையுடன் சேர்த்து முட்டை பிரியாணியும் மெனுவில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு விருப்பமான மற்றும் சுவையான உணவை வழங்குவதன் மூலம், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

முட்டை பிரியாணி போன்ற சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கும் . இதனால், குழடந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும். இந்த திட்டம் கேரளாவில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.