
ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆர்.சி.பி அணி விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவரீஸ் நிறுவனம் வாங்கியது. கிட்டத்தட்ட 111 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆர்.சி.பி அணி வாங்கப்பட்டது. 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை விஜய் மல்லையாதான் ஆர்சிபி அணி உரிமையாளராக இருந்தார்.இதற்கிடையே, வங்கிகளிடம் வாங்கிய 9 ஆயிரம் கோடி லோனை கட்ட தவறியதால் , விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி விட்டார்.
முன்னதாக, விஜய் மல்லையா தனது யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தை டியாஜியோ இன்டியா என்ற நிறுவனத்துக்கு விற்று விட்டார். இதுவும் மது பான தயாரிப்பு நிறுவனம்தான்.
பெங்களுருவை சேர்ந்த இந்த நிறுவனம்தான் இப்போது ஆர்.சி.பி அணியின் உரிமையாளர். மகேந்திர குமார் ஷர்மா என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். ஆனந்த் கிரிப்லு என்பவர் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர்கள் இருவரும்தான் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள்.