
பஹால்காம் தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது கடந்த மே8ம் தேதி விமானத் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க தொடங்கின. பாகிஸ்தானின் 9 விமானப்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், இரு கண்காணிப்பு விமானங்கள், ஒரு ஹெர்குலஸ் 130 ரக விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெர்குலஸ் 130 ரக விமானம் முல்தானில் உள்ள விமானப்படை தளத்தில் ட்ரோன் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. மக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த சாட்டிலைட் புகைப்படங்கள் வழியாக இந்த தகவல் உறுதியாகியுள்ளது. மே 10ம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.