
பாகிஸ்தான் மீது இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்களில் இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்தியா போரை நிறுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி கூறியதாவது, 'இந்திய பாகிஸ்தான் மோதலின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் அழைத்ததும் சரண் அடைந்து விட்டார். இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் குணமாகும். ஆனால், 1971ம் ஆண்டு அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறி பாகிஸ்தானை இந்தியா இரண்டாக உடைத்தது. காங்கிரஸின் சிங்கங்கள் ஒரு போதும், தலை வணங்குவதில்லை. '
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.