பாக்கெட்டில் பணம் வைத்திருக்கிறீர்களா? - நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு

by SAM ASIR, Sep 3, 2018, 23:22 PM IST
ரூபாய் நோட்டுகள் மூலம் நோய் பரவுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT) கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆய்வு முடிவுகள் மற்றும் ஊடகங்களில் வெளியான அறிக்கை அடிப்படையில் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதப்பட்ட இக்கடிதத்தின் நகலினை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கும் இவ்வமைப்பு அனுப்பி வைத்துள்ளது.
 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் சிறுநீர்ப் பாதை தொற்று, சுவாச குழல் தொற்று, இரத்தத்தை விஷமாக்கும் செப்டிசிமியா, தோலில் நோய்த்தொற்று, மூளைக்காய்ச்சல், ஸ்டபிலோகாக்கஸ் யுரேயஸ் என்ற கிருமி மூலம் பரவும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மயக்கம், அதிர்ச்சி ஆகிய அறிகுறிகளைக் கொண்ட டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் நோய், குடல் மற்றும் வயிற்றுக்கோளாறு போன்ற பல நோய்கள் பரவுகின்றன என்று விளக்கும் பல்வேறு ஆய்வு முடிவுகளை அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு இந்தக் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளது. இந்த அவலம் தொடர்வதை தடுப்பதற்கும், இது குறித்து விழிப்புணர்வு உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
"இதுபோன்ற எச்சரிக்கைகளை அறிவியல் இதழ்கள் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. ஆனாலும் தீவிரமான இந்த பொது சுகாதார கேடு குறித்து இதுவரைக்கும் போதுமான விழிப்புணர்வு வரவில்லை. வணிக சமுதாயமே தினமும் அதிக அளவில் ரூபாய் தாள்களை புழங்கி வருகிறது. நோய்க்கிருமிகள் கொண்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதால் வணிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்," என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பொது செயலர் கண்டேல்வால் கூறியுள்ளார்.

You'r reading பாக்கெட்டில் பணம் வைத்திருக்கிறீர்களா? - நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை