மாணவர்களின் கனவு நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தினம்

Dr.Apj abdul kalam 87th Birth anniversary

by Manjula, Oct 15, 2018, 11:57 AM IST

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இளைங்கர்களின் உண்மையான நாயகன், இந்திய ஏவுகணை நாயகன், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த மனிதர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாப்போம்.

சாதனை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாட்டில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

சிறுவயது முதலே வறுமையின் பிடியில் சிக்கினார் அப்துல் கலாம். இருந்தாலும் அந்த கவலையை தூக்கி எறிந்து, குடும்பத்திற்காக வேலைக்கு சென்றார். அப்துல் கலாம், தனது பள்ளிப்படிப்பை இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கினார்.

படிக்கின்ற நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். வெற்றிகரமான தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார்.

கடும் முயற்சியில் 1954ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் தனக்கு ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டியில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

நாட்கள் நகர்ந்தது, 1960 ஆம் ஆண்டு ‘வானூர்தி அபிவிருத்தி அமைத்தல்’ பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் துவங்கினார் அப்துல் கலாம். அதன் முதற்கட்டமாக ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் தந்தையாக போற்றப்படுகிறார்.


அப்துல் கலாம் தன் வாழ்கையின் அடுத்த முக்கிய கட்டத்திற்குள் சென்றார். ஆம், 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.

குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் மக்களின் மனதின் கூடுதல் இடம் பிடித்தார். மீண்டும் 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் நிற்க சொல்லி பலரும் வற்புறுத்த சில காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

இவ்வாறு மக்களின் அன்பையும், பேராதரவையும் பெற்ற இந்த ஒப்பற்ற மனிதன், ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து தன் பயணத்தை முடித்துக் கொண்டார்.

அவர் பெற்ற விருதுகள்:

  1. 1981: பத்ம பூஷன்
  2. 1990:பத்ம விபூஷன்
  3. 1997: பாரத ரத்னா
  4. 1997: தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
  5. 1998:வீர் சவர்கார் விருது
  6. 2000:ராமானுஜன் விருது
  7. 2007:அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
  8. 2007:கிங் சார்லஸ்-II பட்டம்
  9. 2008:பொறியியல் டாக்டர் பட்டம்
  10. 2009: சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
  11. 2009: ஹூவர் மெடல்
  12. 2010: பொறியியல் டாக்டர் பட்டம்
  13. 2012:சட்டங்களின் டாக்டர்
  14. 2012: சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய முக்கிய நூல்கள்:

  • அக்னி சிறகுகள் (சுய சரிதை)
  • இந்தியா 2020
  • எழுச்சி தீபங்கள்
  • பிறந்தது ஒரு புதிய குழந்தை.

அவரது பிறந்த தினமான இன்று சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

You'r reading மாணவர்களின் கனவு நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தினம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை