சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனு! உச்சநீதிமன்றம் இன்று முடிவு

Sabarimala supreme court will decide on the review petitions today

by Manjula, Oct 23, 2018, 11:06 AM IST

அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு பெண் பக்தரும் சாமி தரிசனம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்ட நிலையில் நேற்று அதன் நடை சாத்தப்பட்டு விட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. குண்டூரைச் சேர்ந்த பத்து பெண் பக்தர்கள் குழுவாக மலையேற முயற்சித்தபோது வன்முறையாளர்களால் சூழப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர்

பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, இருமுடி சுமந்து கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட பலர் ஐயப்ப தரிசனம் செய்தனர். பெண்களை தடுத்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு பாஜக, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு கடந்த 19ஆம் தேதி முடிவு செய்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், எப்போது விசாரணை தொடங்கும் என்பதை இன்று முடிவு செய்யும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் நவம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

கேரளா அரசு சார்பில் நீதிமன்றத்தில் கூறியதாவது:

  1. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்றும் என்றும் பெண் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்தது மேலும்  சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை அரசோ, போலீஸோ தடுக்கவில்லை.
  2. சபரிமலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் போராட்டக்களமாக்கி வருகிறது.
  3. சபரிமலையில் இருந்து கிரிமினல்கள் வெளியேற்றப்படுவார்கள்.
  4. கேரள வரலாற்றில் இல்லாத அளவுக்கு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது பெண்கள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேரளா முதல்வர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட் சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும்.

மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 17ம் தேதி நடை திறக்கப்பட்டு 60 நாட்களுக்கு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

You'r reading சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனு! உச்சநீதிமன்றம் இன்று முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை