சபரிமலை போரட்டதிற்கு ஒரு சாமனிய பெண்ணின் கேள்வி?

A common womans ask question about Sabarimala protest

by Manjula, Oct 24, 2018, 11:41 AM IST

ஒரு மத்திய பெண் அமைச்சர் ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா? என சபரிமலை விவகாரம் கூறித்து பேசியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெண்கள் சாமி தரிசனம் செய்ய முயன்றபோது சிலரின் எதிர்ப்பால் பெண்கள் அங்கு தடுக்கப்பட்ட நிலையில் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது.

அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின் கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். பல்வேறும் போராட்டங்கள் விமர்சனங்கள், சபரிமலைக்கு செல்லும் பெண்கள் நக்சலைட் என்ற பட்டம் வேறு.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து பேசுகையில்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து என்னால் எந்த வித கருத்தும் கூற முடியாது. அதே நேரத்தில் வழிபடுவதற்கான உரிமை எனக்கு உள்ளது. வழிபடுவதை அவமதிக்கும் உரிமை எனக்கு இல்லை. என்று கூறினார்

மேலும் "ஒரு அடிப்படை அறிவுடன் சபரிமலை விவகாரத்தைப் பாருங்கள். உங்களுக்கு மாதவிடாயின் போது ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா? போகமாட்டீர்கள் அல்லவா? பிறகு ஏன் அதை கடவுள் இருக்கும் இடத்துக்கு இல்லத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள்? எனக்கு தரிசனம் செய்யும் உரிமையுள்ளது, ஆனால் புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது. இதுதான் வித்தியாசம், இதனை புரிந்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சபரிமலை குறித்த மத்திய அமைச்சர் இராணியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

அமைச்சரின் இந்த கருதுக்கு பெண்களின் பதிலடி இதுதான் எங்களையும் நாங்கள் இருக்கு இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள தெரிந்த எங்களுக்கு கடவுள் முன்பு எப்படி இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லிதர தேவையில்லை.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இது போல கருத்து தெரிவிக்கும் அமைச்சரக்கும் ஓரு கேள்வி, மத நம்பிக்கை இந்திய பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதால் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு செய்தியாக மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்கிறோம், ஒரு சில பெண்களை தவிரை அனைவரும் மற்றவர்களின் நம்பிக்கையை தடுக்க நினைக்கவில்லை அது அடிமைதனம் என்று யார் கூறினாலும் அமைதியாக இருக்கிறோம் இது போன்ற கருத்துக்களால் எங்களையும் மற்றவர்களின் மத நம்பிக்கையை புண்படுத்த வைக்க தயார் செய்ய வேண்டாம்.

சபரிமலை போரட்டதிற்கு ஒரு சாமனிய பெண்ணின் கேள்வி?
           

         (குறிப்பு அனைத்து ஆண்களையும் குறை சொல்லவில்லை )

தண்ணி அடிக்குறவன், தம் அடிக்குறவன்
பொய் சொல்றவன்,திருடுறவன் 

கொலை செய்தவன்,கலவரம் செய்பவன்
கொள்ளை அடிக்குறவன், ஊழல் செய்றவன்
பொய் கணக்கு எழுதுறவன்
பொண்டாட்டிக்கு துரோகம் செய்றவன்
லஞ்சம் வாங்குறவன்
சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்பவன்
பெண்களை வன்புணர்பவன்
ஆணவக் கொலை செய்பவன்
ஜாதி வெறியன்
குடிசைகள கொலுத்துபவன்
சக மனிதனை மத வெறியால் எரிப்பவன்
போலி சாமியார்
கந்துவட்டிக் காரன் என புனிதமானவர்கள் போகலாம்

 

ஆனால் பெண்கள் போனால் புனிதம் கெட்டுவிடும் என்று கூறும் மகான்களே உங்கள் அய்யப்பன் சில காலம் பந்தள மன்னன் மற்றும் அவரது மனைவியுடன் வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்தார், வாழ்ந்தார் என்ற புராணத்தை மறந்து விட்டிர்களா? கடவுள் சரியாகதான் இருக்கிறார்.

அஸ்ஸாமில் காமக்கியா தேவி கோயிலில் பெண் கடவுளையே மூன்று - நாட்கள்  பூட்டிவைக்கும் சமுகத்தில் சாமனிய பெண்ணின் கருத்துக்கு யார் முக்கியதுவம் அளிப்பார்கள். பெண்களிலும் சில தவறனவர்கள் இருப்பார்கள் அவர்களை கடவுள் தண்டிப்பார் நீங்கள் தடுக்க கூடாது.

You'r reading சபரிமலை போரட்டதிற்கு ஒரு சாமனிய பெண்ணின் கேள்வி? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை