இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Delhi Court orders to file charges against TTV Dinakaran on Double leaf party symbol

by Isaivaani, Nov 17, 2018, 15:59 PM IST

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிரிந்தது. ஒன்று எடப்பாடி கட்சியாகவும், மற்றொன்று டிடிவி தினகரன், சசிகலா கட்சியாகவும் மாறியது. இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவியது.

இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரணை நீதிபதி, இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரனுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும் என்றும், லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை