ராமர் கோவில் இங்குதான் கட்டப்படவுள்ளது - சர்ச்சையில் கூகுள் வரைபடம்

Ramjenmabhoomi Site GoogleMap issue

by Devi Priya, Dec 1, 2018, 11:27 AM IST

கூகுள் வரைபடத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முதல் பல இந்துத்துவா அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று களத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நம்பர் 1 கூகுள் வரைபடத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என்பதற்கான இந்தி வாசகம் "Mandir yagi banega" அத்துடன் ராமஜென்ம பூமி என்ற இடத்தை காட்டுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாபர் மசூதி-ராம ஜென்மபூமி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் கூகுள் வரைப்படத்தில் எப்படி வந்தது எனக் கேட்டபோது பயனாளர்கள் வரைபடத்தை எடிட் செய்யலாம். ஆகவே, அப்படி வந்தது தான் இது என்று கூகுள் பதிலளித்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாசகத்தையும் அடையாளத்தையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வந்தது என கூகுள் கூறியுள்ளது.

 

You'r reading ராமர் கோவில் இங்குதான் கட்டப்படவுள்ளது - சர்ச்சையில் கூகுள் வரைபடம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை